மேலும் செய்திகள்
கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்
1 hour(s) ago
தர்மபுரி, ஓணம் பண்டிகையை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேரள மாநில மக்கள் நேற்று, உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகம் முழுவதும், கேரள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி டவுன் பகுதியில் உள்ள கேரள மக்கள், ஓணத்தை முன்னிட்டு, புத்தாடை அணிந்து, அவரவர் வீடுகளில் சுவாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். மேலும், வீடுகளில் பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு, அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, விருந்து அளித்து பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கேரள மக்கள் தங்கள் வீடுகளில், ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
1 hour(s) ago