அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்: முனுசாமி
தர்மபுரி: ''அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்பது இல்லை, அடுத்த தலைமுறை வரும்போது, தொண்டர்கள் தலைவர்களாக வருவர்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசினார்.தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம் கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற துணை பொதுச்செ-யலர் முனுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:- வரும், 2026 சட்ட-சபை தேர்தலில் வெற்றி பெற்று, பழனிசாமியை முதல்வர் ஆக்கு-வதற்காக, மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்-றுகின்றனர். அண்ணாமலை என்பவர் ஒரு தேசிய கட்சியின் தலைவர். அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார். அதன் பிறகு போய்விடுவார். நடிகர் விஜய் இப்போது தான், கட்சியை தொடங்கி இருக்கிறார். தி.மு.க.,வில் உதயநிதி தனிப்பட்ட உழைப்பால், இந்த இடத்-திற்கு வரவில்லை. தாத்தா, தந்தை, அடுத்து மகன் என்ற நிலையில் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல்.ஆனால், அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி, இங்கு வாரிசு அர-சியல் இல்லை. முன்னாள் முதல்-வர், எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கி, மறைந்த போது அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. அதேபோல், முன்னாள் முதல்-வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. இந்த கட்சியில் உழைப்பவர்கள் தான் தலைவராக வந்திருக்கின்-றனர். அடுத்த தலைமுறை வரும்போது, தலைவர்கள் தானாக வருவர்.இவ்வாறு கூறினார்.