மேலும் செய்திகள்
தர்ணா போராட்டம்
13-Nov-2024
ஓய்வூதியர்கள் தர்ணாதர்மபுரி, நவ. 19-சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில இணை செயலாளர் குப்புசாமி பேசினர். இதில், வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக, மாதாந்திர சிறப்பு பென்சன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.
13-Nov-2024