உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஞ்.,களை நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

பஞ்.,களை நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

தர்மபுரி: தர்மபுரி தாலுாவிலுள்ள இலக்கியம்பட்டி, சோகத்துார் மற்றும் நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள தடங்கம், ஏ.ஜெட்டிஹள்ளி ஆகிய, 4 கிராம பஞ்.,களை, தர்மபுரி நகராட்சி உடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம், இலக்கியம்பட்டி, சோகத்துார் பஞ்.,களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று, அந்தந்த கிராம பஞ்.,களை சேர்ந்த பொதுமக்கள் பஞ்., அலுவலகம் முன் குவிந்ததுடன், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றாக மனு கொடுத்தனர். தொடர்ந்து, தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம், இலக்கியம்பட்டி, சோகத்துார் பஞ்.,களை சேர்ந்தவர்கள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெங்கடசமுத்திரம் பஞ்., மக்கள், பென்னாகரம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பருவதனஹள்ளி பஞ்., மக்கள் என பலர், தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம், மனு அளித்தனர்.தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க எதிப்பு தெரிவித்து, பஞ்., மக்கள் கடந்த, 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதனால், தர்மபுரி ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியம் தலைமையில், 8 டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ்பெக்டர், 350 போலீசார் தர்மபுரி நகரை சுற்றியுள்ள ஒட்டப்பட்டி, பழைய கோட்ரஸ், கலெக்டர் அலுவலகம், தர்மபுரி, 4 ரோடு, சோகத்துார் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை