உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு

சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு

அரூர்: வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் நான்கு வழிச்சாலை பணி முடிவடையும் வரை, எச்.புதுப்பட்டி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என, த.மா.கா., கோரிக்கை விடுத்-துள்ளது. இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்-சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட த.மா.கா., தலைவர் அரவிந்தன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் வரையிலான, 141 கி.மீ., துாரத்திற்கு நான்குவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது, 100 கி.மீ., துாரம் மட்டுமே சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் வரும், 16 முதல், எச்.புதுப்பட்டியில் உள்ள டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூ-லிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. முழுமையாக சாலை பணிகள் முடிவடைந்த பின்பே, சுங்க கட்-டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி