கோரிக்கைகளை வலியுறுத்தி பி.டி.ஓ.,விடம் மனு
நல்லம்பள்ளி, தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில், நல்லம்பள்ளி பி.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு நேற்று அளித்தனர்.இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது: கிராம பஞ்.,களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பஞ்., கணக்கில் இணைக்க வேண்டும். டேங்க் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, 7-வது ஊதிய நிலுவை தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 250 ரூபாய் ஊதியத்தில் கூடுதலாக பணி செய்யும், டேங்க் ஆபரேட்டர்களை பணி வரன்முறைப்படுத்தி, முழு ஊதியம் வழங்க வேண்டும். பஞ்., தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.