உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெல் நடவுக்கு உழவு பணி; விவசாயிகள் தீவிரம்

நெல் நடவுக்கு உழவு பணி; விவசாயிகள் தீவிரம்

நெல் நடவுக்கு உழவு பணி; விவசாயிகள் தீவிரம்அரூர், அக். 10-அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த ஆக., இறுதியில் தொடர்-மழை பெய்தது. இதையடுத்து, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, வாச்சாத்தி, தொட்டம்பட்டி, கீழானுார், மாம்பாடி, வேப்பம்பட்டி, பறையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்தனர். தொடர்ந்து, நாற்று வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில், மழையின்றி விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர்-மழை பெய்து வருகிறது. இதையடுத்து, ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், நிலத்தை டிராக்டரை கொண்டு உழுது பண்படுத்தி, நாற்று பறித்து சம்பா நடவு பணியை, விவசாயிகள் துவங்கி உள்ளனர். இதன் அறுவடை, ஜனவரி மாதத்தில் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி