மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் துவங்கியது கந்தசஷ்டி விழா
03-Nov-2024
கந்த சஷ்டியையொட்டிமுருகன் கோவிலில் பூஜைதர்மபுரி, நவ. 8-கந்த சஷ்டியையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும்அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.தர்மபுரி, குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை, 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவ., 3ல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, கோவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் தங்க கவச அலங்காரத்தில் உற்சவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு, 10:00 மணிக்கு மேல், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
03-Nov-2024