உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை அமைக்க எதிர்ப்பு: மக்கள் மறியல்

சாலை அமைக்க எதிர்ப்பு: மக்கள் மறியல்

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட, கூச்சானுார் மோட்டூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மண் சாலையை தற்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தன் பட்டா நிலத்தில் வழி உள்ளதால் அதில் சாலை அமைக்கக்கூடாது எனவும், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறி, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையில் சம்மந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, ஒப்பந்ததாரர் சாலை அமைக்க முயன்றபோது, தனிநபர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர், பள்ளி மாணவர்களுடன், போச்சம்பள்ளியிலிருந்து சந்துார் வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், கூச்சானுார் மோட்டூர் பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி, சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை