உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கே.குள்ளாத்திரம்பட்டியில் குடிநீர் கேட்டு மறியல்

கே.குள்ளாத்திரம்பட்டியில் குடிநீர் கேட்டு மறியல்

பென்னாகரம், பென்னாகரம் அடுத்த கே.குள்ளாத்திரம்பட்டியில், குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கே.குள்ளாத்திரம்பட்டி காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வழக்கமாக செல்லக்கூடிய குடிநீர் குழாய், பட்டா நிலத்தில் செல்வதாக கூறி, இடத்துக்காரர் அதிகாரிகளிடம் புகார் கூறியதால், பைப்பை கழற்றி உள்ளனர். ஒரு மாதமாகியும் அந்த குடிநீர் குழாய் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டதால், நேற்று காலை பென்னாகரம் - ஏரியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்திரம், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடத்தில் பைப் அமைத்து, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ