மேலும் செய்திகள்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
20-Nov-2024
தர்மபுரி: பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், தர்மபுரி பால்வள ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாநில பொதுச்-செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில், பாலுக்கான கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். பசும்பால் ஒரு லிட்டர், 45, எருமைப்பால், 54 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்ப சங்கங்-களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்கான தொகை, 50 சத-வீதம் ஆவின் ஒன்றியங்களில் வழங்க வேண்டும். கால்நடைக-ளுக்கு, ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போட வேண்டும்.கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் மத்திய அரசு, 50 சதவீதம், மாநில அரசு, 30 சதவீதம் உற்பத்தியாளர்கள், 10 சத-வீதம் என நிர்ணயிக்க வேண்டும். தமிழக அரசு ஆட்சி பொறுப்-பேற்ற பின், ஆவினில் பால் விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்ததால், 300 கோடி ரூபாய் ஆவினுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை, தமிழக அரசு மானிய-மாக ஆவினுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் குமார் உள்பட பலர் பங்கேற்-றனர்.
20-Nov-2024