உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடி பண்டிகையில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்

ஆடி பண்டிகையில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்

அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று, ஆடிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. அரூர் தில்லை நகரில், சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன், அழிஞ்சி மரக் குச்சியில், தேங்காயை கோர்த்து, பாசிப்பருப்பு, அவல், வெல்லம் உள்ளிட்டவைகளை சேர்த்து, தீயில் சுட்டனர். பின், அவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பின், நண்பர்களுக்கு வழங்கினர்.* அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில் நேற்று, புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள், அனுமந்தீர்த்தம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர், மொரப்பூர் அடுத்த கர்த்தாங்குளம், இருமத்துார், டி.அம்மாபேட்டை சென்னியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று அங்குள்ள தென்பெண்ணையாற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.* கடத்துார் அடுத்த மணியம்பாடி ஊராட்சி ஆலமரத்துப்பட்டியிலுள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று ஆடி பிறப்பை‍யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதே போன்று கடத்துார் காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன்கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை