உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்கள் தொடர்பு திட்ட முகாம் 349 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 349 பேருக்கு நலத்திட்ட உதவி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சுவாடியில் மக்கள் தொடர்பு திட்டம் மாவட்ட கலெக்டர் சதீஷ் தலை-மையில் நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் முன்னிலை வகித்தார். முகாமில், வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்-துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்-நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வை-யிட்டு இத்துறைகளின் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, 349 பேருக்கு, 49.84 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி-களை கலெக்டர் வழங்கினார். அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, தாசில்தார் சின்னா உள்ளிட்ட அதி-காரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ