மேலும் செய்திகள்
மக்கள் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் தொட்டி
06-Jun-2025
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள, காலபைரவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பக்தர்கள் தங்கும் விடுதி, 1.79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அந்த இடத்தில் விடுதிக்கான சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட கோவில் நிதியிலிருந்து, 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், தர்மபுரி தி.மு.க.,- எம்.பி., மணி, பா.ம.க., -எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தனர். தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், காலபைரவர் கோவில் செயல் அலுவலர் புனிதராஜ், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தேவகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Jun-2025