கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி,கடத்துார் அடுத்த முத்தனுாரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை அரூர் கோட்ட கால்நடை உதவி இயக்குனர் கனகசபை தொடங்கி வைத்தார். முகாமில் பசு மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி, கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி, போடப்பட்டது. சினை நிற்காத பசுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிறந்த கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை பராமரிக்கும் விவசாயிக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கால்நடை வளர்ப்போருக்கு தீவன விதை இலவசமாக வழங்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.