உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் ராகி சாகுபடி பரப்பு 12,000 ஹெக்டேர் ராபி பருவத்தில் 1,500 டன் கொள்முதல் இலக்கு

தர்மபுரியில் ராகி சாகுபடி பரப்பு 12,000 ஹெக்டேர் ராபி பருவத்தில் 1,500 டன் கொள்முதல் இலக்கு

தர்மபுரி: அரசு வேளாண் விற்பனை கூடத்தில், ராகி கொள்முதல் விலை உயர்வால், சாகுபடி பரப்பு, ராபி பருவத்தில், 12,000 ஹெக்டேரா-கவும், வேளாண் விற்பனை கூடங்களில் கொள்முதல் இலக்கு, 1,500 டன் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், ராகி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம், 2022 முதல் ராகி நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 2022 - 2023 ல் போதிய விழிப்புணர்வு இல்லாததால், குறைந்த அளவில் ராகியை விவசாயிகள் விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ ராகி, 35 ரூபாய் என, 32 டன்னும், 2023 - 2024 ல் ஒரு கிலோ, 38 ரூபாய் என, 597 டன்னும், கொள்முதல் செய்யப்பட்டது.மாவட்டத்தில், தர்மபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட, 3 இடங்-களில், காரீப் மற்றும் ராபி பருவ ராகி கொள்முதல் செய்ய, கொள்-முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு கிலோ ராகி, 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ராகி கொள்-முதல் விலை அதிகரிப்பால், விவசாயிகள் ராகி பயிரிட ஆர்வம் காட்டி வருதாக, வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''தர்-மபுரி மாவட்டம், சிறுதானியம் அதிகம் விளையும் பகுதியாக உள்-ளது. விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் செய்ய, வேளாண் விற்பனை கூடங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கொள்முதல் விலை, ஒரு கிலோ ராகி, 42 ரூபாய் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்த நிலையில், ராகி சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில், ராகி சாகுபடி பரப்பாக காரீப் பருவத்தில், 10,236 ஹெக்டேர், ராபி பருவத்தில், 12,000 என, 22,236 ஹெக்டேர் ராகி சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், விவசாயிகளுக்கு, 80 டன் ராகி விதை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 86 டன் ராகி விதை கையிருப்பில் உள்ளது. ராபி பருவத்தில், வேளாண் விற்-பனை கூடங்களில் குறைந்தபட்சம், 1,500 டன் கொள்முதல் செய்ய இலக்கு செய்ய நிர்ணயிக்கபட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி