மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
14-Jul-2025
தர்மபுரி, தமிழகத்தில், 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தர்மபுரி மாவட்டத்தில் மழை பெய்தது. இதில், தர்மபுரியில், 10 மி.மீ., பாலக்கோடு, 11, மாரண்டஹள்ளி, 4, பாப்பிரெட்டிபட்டி, 5.20 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலை, 5:30 முதல், 6:00 மணி வரை, தர்மபுரியில் கனமழை பெய்தது. இதனால், தர்மபுரி டவுன் மற்றும் இலக்கியம்பட்டி உள்ளிட்ட இடங்களில், தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்டி சென்று கடும் அவதியடைந்தனர். மக்களும் சாலையில் நடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டனர்.
14-Jul-2025