உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மர்மச்சாவு இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகை

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மர்மச்சாவு இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகை

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், புலிக்கரையை சேர்ந்தவர் மணிவண்ணன், 49. தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலக ஒப்பந்த ஊழியர். இவர், பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக, புதிய தர்மபுரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் பாலக்கோடு அடுத்த கர்த்தாரஹள்ளி டோல்கேட் அருகில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் போது, மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில், அவரது உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், நேற்று சம்பந்தப்பட்ட டோல்கேட் அருகில், சாலை அமைக்கும் பணியில் ஈடுட்டு வரும் அலுவலகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் ஒப்பந்த அடிப்படையில், இங்கு வேலை செய்கின்றனர். அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உயிரிழந்தால் உரிய இழப்பீடும் வழங்குவதில்லை எனக்கூறினர். அங்கு வந்த பாலக்கோடு போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து சம்பந்தப்பட்ட சாலை அமைக்கும் நிறுவனத்திடம் பேசி உரிய இழப்பீடு வாங்கி தருவதாக கூறி, அவர்களை கலைந்து போகச்செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை