உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இருவர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

இருவர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

காரிமங்கலம், பாலக்கோடு அருகே நடந்த விபத்தில், 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சொன்னம்பட்டியை சேர்ந்த சுனில்குமார், 19. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முருகன், 20, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், 3ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சுனில்குமார், முருகன் ஆகியோர் டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் பாலக்கோடு அடுத்த, சின்னார்தனஹள்ளி கூட்ரோடு அருகே சாலையில் இருவரும் அடிபட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.பாலக்கோடு போலீசார், இருவரின் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இருவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இளைஞர்களின் உறவினர்கள் நேற்று மாலை காரிமங்கலம்- வெள்ளிச்சந்தை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் மரியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து, மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ