மேலும் செய்திகள்
சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
11-Jun-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டையில் சாலைகளை ஆக்கிரமித்து, பலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் பாப்பிரெட்டிப்பட்டி - மொரப்பூர் சாலை, அரூர், தர்மபுரி, பொம்மிடி செல்லும் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் தலைமையில், உதவி பொறியாளர் நரசிம்மன், சாலை ஆய்வாளர் மாரியப்பன் மேற்பார்வையில், சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைத்த கடைகள், ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
11-Jun-2025