உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டுகோள்

ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டுகோள்

மொரப்பூர்: மொரப்பூரில் சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நடுப்பட்டியில், சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தர்மபுரி, வேலுார், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மேலும், திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க, இக்கோவில் வளாகத்தில், கோழிகளை கட்டி வைக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது.இந்நிலையில், மொர ப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.50 கி.மீ., துாரமுள்ள கோவிலுக்கு செல்லும் வழியில், ஜோலார்பேட்டை - சேலம் ரயில் வழித்தடம் உள்ளது. இதை கடந்து செல்ல, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறுகலாக உள்ளதால், 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. இதன் வழியே செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, சுரங்கப்பாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை