மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணைத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் மாதந்தோறும் முறையான ஓய்வூதியம் வழங்கப்படும் என கூறியதை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு பென்சன், 6,750ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில், தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரை, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதலைமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
01-Oct-2025