உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்ட சபை தொகுதி நிலையான கண்கா-ணிப்பு குழு ஆனந்தன் தலைமையிலான குழு சின்னமஞ்ச-வாடி பகுதியில் நேற்று மாலை, 5:00 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அரூர் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் அயோத்தி-யபட்டணம் நோக்கி வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் வந்த, எஸ்.பட்டி யை சேர்ந்த வெங்கட்ராமன், 48, உரிய ஆவணமின்றி, 62,000 ரூபாய் வைத்திருந்தார். இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை