ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தொலைதுார பணியிட மாறுதலை மறுபரிசீ-லனை செய்யக்கோரி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் வெளிநடப்பு ஆர்ப்-பாட்டம், தர்மபுரி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார்.இதில், தர்மபுரி மாவட்டம் வறட்சி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வரும் நிலையில், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணி-களை மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொலைதுார பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்-படும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், ஊழியர்களின் குழந்தைகளின் கல்-வியும், குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, தொலைதுார பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வெளிப்படையான கலந்தாய்வு முறையில், பணியிட மாறுதல்களை மேற்கொள்ள வலியுறுத்தினர்.* நேற்று மாலை பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் வட்ட கிளை நிர்வாகிகள் தென்-னகன், கார்த்திக் செல்வம் தலைமையில் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பி.டி.ஓ., மார்க்ரெட் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா-கத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலு-வலர்கள் சங்கம் சார்பில், ஒரு மணி நேர வெளி-நடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். அதே போல், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா-கத்தில், வட்ட செயலாளர் சிலம்பரசன் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.