மணல் கடத்தியவர் கைது
அரூர்; அரூர் எஸ்.ஐ., சக்தி வேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு நாரியம்பட்டி பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் விசாரித்தனர். அதில், அவர் நாரியம்பட்டியை சேர்ந்த ராஜா, 46, என்பதும், தென்பெண்ணையாற்றிற்கு செல்லும் ஓடை பகுதியிலிருந்து, அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜாவை கைது செய்த போலீசார், டிராக்டர் டிரைலர் மற்றும் மணலை பறிமுதல் செய்து, அரூர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.