உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆட்டுச்சந்தை இடத்தில் மரக்கன்று விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு

ஆட்டுச்சந்தை இடத்தில் மரக்கன்று விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு

நல்லம்பள்ளி நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் நடக்கும் ஆட்டு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் தங்களது ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்து செல்கின்றனர்.நல்லம்பள்ளி ஆடு வியாபாரி ராஜசேகர் கூறியதாவது: ஆட்டு சந்தை நடக்கும் இடத்தில், கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். மரம் வளர்ப்பது தேவையான ஒன்றுதான். ஆனால், ஆட்டு சந்தை கூடும் இடம் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர். ஆட்டு சந்தைக்கு, போதிய இடவசதி இல்லை. சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தவிக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, நல்லம்பள்ளி பி.டி.ஓ., இளங்குமரன் கூறுகையில், ''நல்லம்பள்ளி வாரச்சந்தையில் மரக்கன்று நட்ட இடத்தில், ஆட்டுச்சந்தை கூடும் நிலையில், அதற்கு மாற்றாக பஞ்., சார்பில், மாற்றிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை, நல்லம்பள்ளி பஞ்., நிர்வாகம் மேற்கொள்ளும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை