உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பென்னாகரம் தொகுதியில் பள்ளி கட்டடங்கள் திறப்பு

பென்னாகரம் தொகுதியில் பள்ளி கட்டடங்கள் திறப்பு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் நபார்டு திட்டத்தின் மூலம், 94.24 லட்சம் மதிப்பீட்டிலும், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1.88 கோடி மதிப்பீட்டிலும், பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1.17 கோடி ரூபாயிலும், ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 1.88 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பரை கட்டங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ., வான ஜி.கே.மணி இப்பள்ளிகளில் குத்துவிளக்கேற்றி கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்வில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி