உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியாற்றில் மூழ்கிய ஐ.டி., ஊழியரை 2 நாளாக தேடும் பணி

காவிரியாற்றில் மூழ்கிய ஐ.டி., ஊழியரை 2 நாளாக தேடும் பணி

ஒகேனக்கல்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஆர்.ஆர்.,நகரை சேர்ந்தவர் நாகப்பா. இவருடைய மகன் மஞ்சுநாத், 30. இவர் பி.ஏ., பட்டப்படிப்பு முடித்து விட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி., ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு தன் ஆறு நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா வந்தார். அப்போது, மெயின் அருவி அருகே, தடை செய்யப்பட்ட பகுதியில் மஞ்சுநாத் குளித்து கொண்டிருந்தார். அப்போது, தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். உடன் வந்த நண்பர்கள் தகவலின் படி, ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பரிசல் ஓட்டிகளின் துணையோடு மஞ்சுநாத்தை தேடினர். நேற்றும், 2து நாளாக காலை, முதல் தேடியும் மஞ்சுநாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ