உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விதை முளைப்பு திறனறிய பரிசோதனை அவசியம்

விதை முளைப்பு திறனறிய பரிசோதனை அவசியம்

விதை முளைப்பு திறனறியபரிசோதனை அவசியம்தர்மபுரி, அக். 11-தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விதைகளின் முறைப்புத்திறனை பரிசோதனை செய்து விதைக்க வேண்டுமென, விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி விதை பரிசோதனை நிலையத்தில், ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுகிறது. இதில், நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயிர்களில் நடுவதன் மூலம், பயிர்கள் நன்கு செழித்து வளரும். முளைப்புத்திறன் குறைந்த விதைகளால், பயிர்கள் குறைந்த அளவிலேயே வளரும். இதில், மக்காச்சோள விதைகள், 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு, ஆகியவை, 80 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகியவை, 70, மிளகாய் விதை, 60 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். எனவே, விவசாயிகள் விதைகளை விதைக்கும் போது, விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து விதைக்க வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்களின் விதை குவியல்களில் மாதிரி ஒன்று எடுத்து, அதில், பயிர், அதன் ரகம் மற்றும் தேவைப்படும் விபரம் ஆகியவற்றை எழுதி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி, கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள விதை பரிசோதனை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ