உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

காரிமங்கலம்: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு தாலுகாவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து, தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி, காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளியில் ஒரு மளிகை கடை மற்றும் பாலக்கோடு தாலுகா மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுாரில் ஒரு மளிகை கடை என, 2 கடைகளில் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக, வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, போலீசார் பரிந்துறையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா உத்தரவின் படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் சிவா, ரவிச்சந்திரன் இணைந்து கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர். மேலும், கடைகளுக்கு தலா, 25,000 வீதம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை