மேலும் செய்திகள்
கண் டாக்டர்கள் பயிலரங்கம்
22-Sep-2024
பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில்மென்திறன் மேம்பாடு பயிலரங்கம்தர்மபுரி, அக். 17-தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய, ஆங்கில துறையின் என்லிட்டரசியா இலக்கிய மன்றம், எல்டாய் தர்மபுரி அமைப்பு சார்பாக, 2 நாள், 'மென்திறன் மேம்பாட்டு பயிலரங்கம்' நேற்று தொடங்கியது.இதில், 'வேலை வாய்ப்பை மேம்படுத்தி கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. இதில், பயிலரங்க அமைப்பாளர் கிருத்திகா வரவேற்றார். ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். மென்திறன் மேம்பாடு பயிற்றுனர் பெங்களூருவை சேர்ந்த, லாவண்யா கலந்து கொண்டு, நேர மேலாண்மை மற்றும் நேர்காணலில் செயல்பட வேண்டிய விதம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். கவுரவ விரிவுரையாளர் சரண்யா நன்றி கூறினார்.
22-Sep-2024