உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்

தர்மபுரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தர்-மபுரி மாவட்டத்தில், 5 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், கடந்த நவ., 4 அன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் நடந்தது. அதை தொடர்ந்து, 2026 ஜன., 3, 4ல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.இந்நிலையில், தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நி-லைப்பள்ளி, அமலா மழலையர் மற்றும் தொடக்-கப்பள்ளி, பாலக்கோடு சட்டசபை தொகுதியில் பேருராட்சி, ஊராட்சி ஒன்றி உருது நடுநிலைப்-பள்ளி மற்றும் செல்லியம்பட்டி, ஆர்.சி., நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய ஓட்டுச்சா-வடி மையங்களில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார்.இதில், தர்மபுரி தாசில்தார் சவுகத்அலி, பாலக்-கோடு தாசில்தார் அசோக்குமார் உட்பட தொடர்பு-டைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை