மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்
28-Jun-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்கம், வேப்பனஹள்ளி ஒன்றியம் சார்பில், 2ம் ஆண்டு துவக்க விழா நடந்தது-. அதையொட்டி, தடத்தாரையிலுள்ள பவளமலை பாலமுருகன் கோவிலில் நேற்று காலை, 7:45 மணிக்கு, ஆறுபடை சேவா சங்க முருகர் கொடியேற்று விழா நடந்தது. ராமர் கோவிலில் இருந்து தடத்தாரை பாலமுருகர் கோவில் வரை சுவாமி ஊர்வலம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், முருகன், வள்ளி, தெய்வானை அம்மன், நகுலன் நடனம் ஆகியவை நடந்தது. 9:00 மணிக்கு, விநாயகர் சிலை அமைத்தல், சிறப்பு அன்னதானம், பவளமலை பாலமுருகர் கோவிலில் சிறப்பு பூஜை, முருகர் பாடல் பஜனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, வாணவேடிக்கை நடந்தது.
28-Jun-2025