மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
30-Aug-2025
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி பஞ்சாயத்தில் நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. முகாமை பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்திரம், பி.டி.ஓ.,லோகநாதன், சத்திவேல், இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.* அரூர் அடுத்த வேடகட்டமடுவில் நடந்த முகாமிற்கு அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், வேடகட்டமடுவு பஞ்.,ஐ சேர்ந்த பெரும்பாலான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர். இதில், அரூர் தாசில்தார் பெருமாள், அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
30-Aug-2025