| ADDED : பிப் 17, 2024 12:38 PM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். இதில் தேசிய அளவில் தேக்வாண்டா, ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த வூஷு போட்டியில் மாணவன் அகரன் பங்கேற்று, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று தர்மபுரி மாவட்டத்தில் முதன் முறையாக வெள்ளி பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், வூஷு பயிற்றுனர் சிலம்பரசு ஆகியோரை தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.