உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கடம்பரஅள்ளியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம், பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினி-யோகம் செய்ய, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்-நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம், வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்-ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்-கிறது.இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்-றனர். அதில், 50 பேர் நேற்று காலை, 10:00 மணிக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி, கை, கால் வலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாக தெரி-வித்துள்ளனர். இதற்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலுள்ள ஒகேனக்கல் நீரை குடித்ததால் தான் ஏற்பட்டு இருக்கும் என கூறி-யுள்ளனர்.இதையடுத்து, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில், மருத்துவர்கள் கீர்த்தி, அருண்பிரசாத் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், மாணவ, மாணவியருக்கு பள்ளி வளா-கத்தில் சிகிச்சை அளித்தனர். காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், மொரப்பூர், ஏ.பி.டி.ஓ., ராஜா, மருத்துவக் குழுவினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக குழுவினர், கடம்பரஹள்ளி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, குடிநீரை பரி-சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.இதனிடையே, கடம்பரஹள்ளியை சேர்ந்த திருப்பதி, 35, என்-பவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தனியாக குடிநீர் குழாய் இணைப்பு அமைத்துள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துள்-ளனர். ஆத்திரமடைந்த திருப்பதி 'உங்களை எல்லாம், ஏதாவது ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன்' என கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று காலை, 6:30 மணிக்கு அவர், மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியின் மேல் ஏறியுள்ளார். தொட்டி நீரில் அவர் ஏதேனும் கலந்தாரா என, அவரிடம், கம்பைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ