மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்குதல், வங்கி இணைப்பு சாதனைகள் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் சார்ந்த, தொழில் நடவடிக்கை உறுதி செய்ய வேண்டும் என, சுய உதவிக்குழுக்கழுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். மகளிர் திட்டத்தை சார்ந்த அரூர், பென்னாகரம், மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாரங்களும், கம்பை-நல்லுார் மற்றும் மாரண்டஹள்ளி ஆகிய பேரூராட்சிகளும், அவர்-களுக்காக வழங்கப்பட்ட கடன் வழங்குதல் பணி இலக்கை முழு-மையாக பூர்த்தி செய்ய வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்-தினார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் முகமதுநசீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், உதவி திட்ட அலுவ-லர்கள் சஞ்சீவிகுமார், சந்தோஷம் உள்பட பலர் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago