உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பனிப்பொழிவால் ஸ்வெட்டர் விற்பனை ஜோர்

பனிப்பொழிவால் ஸ்வெட்டர் விற்பனை ஜோர்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், சாரல்மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் கடும் குளிரும், அதிகாலையில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதனால் ஸ்வெட்டர், குல்லா மற்றும் கம்பளி வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அரூர் கடைவீதியிலுள்ள ஜவுளி கடைகள் மற்றும் சாலையோர கடைகளில், ரெயின் கோட், கம்பளி, ஸ்வெட்டர் மற்றும் தலைக்கு அணியும் குல்லா விற்பனை சூடு பிடித்துள்ளது. குழந்-தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு அளவுகளினாலான ஸ்வெட்டர், 350 ரூபாயில் இருந்து, 900 ரூபாய் வரையிலும், கம்-பளி, 450 முதல் 1,100 ரூபாய் வரையும், ரெயின் கோட், 550 முதல், 600 ரூபாய் வரையும், குல்லா, 70 ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை