மேலும் செய்திகள்
வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
14-Jun-2025
அரூர், அரூரிலுள்ள வணிக வரி அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அரூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில வரி அலுவலர் பெருமாள், துணை மாநில வரி அலுவலர் மதுமதி ஆகியோர், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும், புற்றுநோய் அறுவைச்சிகிச்சை, டயாலிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் சிகிச்சைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தீ விபத்து, குடும்ப நில நிதியுதவி, திருமண உதவி, விபத்து கால உதவி, விளையாட்டு நிதியுதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறினர்.மேலும், அரூர் நகரிலுள்ள அனைத்து சிறு, குறு மற்றும் பெரு வியாபாரிகள் அனைவரும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய, வேண்டுகோள் விடுத்தனர். இதில், துணை வணிக வரி அலுவலர் குமார் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
14-Jun-2025