உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 9வது மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 9வது மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 9வது மாநாடுதர்மபுரி, டிச. 1-தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, 9வது மாநாடு தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில், அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைய இண்டூர், தீர்த்தமலை, மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி ஆகிய, 4 பஞ்.,களை ஒன்றியங்களாக உருவாக்க வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை கணக்கில் கொண்டு, தனி துணை பி.டி.ஓ., பணியிடம் உருவாக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வட்டார திட்ட அலுவலரை தனியாக நியமித்து, ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையிலுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளை, ஊர்நல அலுவலர் முதல் மற்றும் இரண்டாம் நிலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ச்சியாக விடுமுறை தினத்திலும் இணைய வழி ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். 'மக்களுடன் முதல்வர்' முகாமிற்கான அனைத்து பணிகளையும், ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். முகாமை ஒவ்வொரு கிராம பஞ்.,களிலும் நடத்தி, ஒவ்வொரு பஞ்.,க்கும் செலவினங்களுக்காக அரசு ஒதுக்கிய, 25,000 ரூபாய் நிதியை ஒதுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை