உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வகுப்பறையில் மாணவனை பூட்டி சென்ற ஆசிரியர்கள்

வகுப்பறையில் மாணவனை பூட்டி சென்ற ஆசிரியர்கள்

ஏ.செக்காரப்பட்டி; தர்மபுரி அடுத்த, ஏ.செக்காரப்பட்டி, அரசு நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, 108 மாணவர்கள் படிக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு மாணவன் கடந்த, 22ம் தேதி மாலை, பள்ளி நேரம் முடிந்தும், வீட்டிற்கு வராததால், பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர். அங்கு, பூட்டிய வகுப்பறைக்குள் மாணவன் துாங்கிக் கொண்டிருந்தான். பெற்றோர் அதிர்ச்சியடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையறிந்த ஆசிரியர்கள், மீண்டும் பள்ளிக்கு வந்து, வகுப்பறையை திறந்தனர். வகுப்பறையில் மேஜைக்கு அடியில், மாணவன் துாங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல், வகுப்பறையை பூட்டி சென்றதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இது குறித்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர் ஜீவா ஆகியோர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை