மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் திருட்டு
01-Apr-2025
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Apr-2025
மாத்வருக்கு சிவ வழிபாடு உண்டா ?
15-Apr-2025 | 1
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டியில், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு திருட வந்த ஒருவர், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருட, கையை உள்ள நுழைத்துள்ளார்.அப்போது, அவரது கை உண்டியலில் சிக்கியது. கையை வெளியே எடுக்க முடியாமல் போராடிய திருடன், விடிய விடிய கோவிவிலில் காத்து கிடந்தான். தகவல் கிடைத்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரித்தனர்.இதில், உண்டியலில் திருட முயன்றவர் சேசம்பட்டி அருகே சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், 42, என, தெரிந்தது. தீயணைப்பு துறையினர் உண்டியலை இயந்திரத்தால் துண்டித்து, திருடனை மீட்டனர். போலீசார் திருடனை கைது செய்தனர்.
01-Apr-2025
12-Apr-2025
15-Apr-2025 | 1