உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிட்பண்ட் நடத்தியவர் எஸ்கேப் ஏமாந்தவர்கள் எஸ்.பி.,யிடம் மனு

சிட்பண்ட் நடத்தியவர் எஸ்கேப் ஏமாந்தவர்கள் எஸ்.பி.,யிடம் மனு

தர்மபுரி:சீட்டு பணம் வழங்காமல் ஏமாற்றி, தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், நேற்று தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:தர்மபுரி, ஸ்ரீதனம் சிட்ஸ் பிரைவேட் லிட்., நிறுவனர் கார்த்திக், தர்மபுரி, சேலம் உட்பட மாவட்டங்களில் சிட்பண்ட் நடத்தி வந்தார். இவரிடம், 10 லட்சம் ரூபாய் சீட்டு உட்பட, பல லட்சம் ரூபாய் சீட்டை ஏராளமானோர் கட்டி வந்தோம்.பலரின் சீட்டு, 2024 அக்டோபரில் முடிந்தது. சீட்டு பணத்தின் முழு தொகையை கார்த்திக் தரவில்லை. இந்நிலையில், அலுவலகத்தை மூடி, கார்த்திக் தலைமறைவானார். கார்த்திக்கை கண்டுபிடித்து, நாங்கள் கட்டிய பணத்தை அவரிடமிருந்து பெற்று தர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை