மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
20 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
20 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி உள்ளிட்ட குழுவினர், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மளிகை கடையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அதேபோல், அரூர், மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகள், உணவகங்கள், குளிர்பான கடைகள் மற்றும் பேக்கரிகளில், 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான குளிர்பான பாட்டில்கள், உரிய விபரங்கள் இல்லாத தின்பண்டங்கள் மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கார மற்றும் இறைச்சி வகைகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, 5 கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய், மேலும், 5 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, மொத்தம், 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025