உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆலங்கட்டி மழையால் தக்காளி தோட்டங்கள் சேதம்

ஆலங்கட்டி மழையால் தக்காளி தோட்டங்கள் சேதம்

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, பெல்ரம்பட்டியில் சூறை காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால், சேதமான தக்காளி தோட்டங்களுக்கு,- தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, திருமல்வாடி, கரிகுட்டனுார், சீங்காடு, பெல்லுஹள்ளி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி, வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், பெல்ரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், 100 ஏக்கர் பரப்பில் தக்காளி தோட்டங்கள் சாய்ந்து, காய்கள் உதிர்ந்துள்ளன. மேலும் நெல், வாழை உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன.இது குறித்து, பெல்ரம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜன் கூறுகையில், ''தக்காளி ஏற்கனவே விலை குறைந்து ஒரு கிலோ, 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மழையால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில், தக்காளி தோட்டம் சேதமடைந்துள்ளதால், கடன் சுமையில் சிக்கி தவிக்கிறோம். எனவே, தமிழக அரசு தக்காளி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை