ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல்,: வார விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லில் சுற்றுலா பய-ணிகள் குடும்பத்தோடு, காவிரியாற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமான ஒகேனக்கல்-லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநி-லங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று, 1,200 கன அடியாக இருந்தது. இதனால் ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகள் வறண்ட நிலையில் இருந்தாலும், மேட்டூர் அணை நீர்மட்டம், 110 அடிக்கு மேல் உள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று, 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும், மசாஜ் செய்தும், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.