உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  போலீஸ்காரரை கடித்த த.வெ.க., தொண்டர் கைது

 போலீஸ்காரரை கடித்த த.வெ.க., தொண்டர் கைது

பாலக்கோடு: பாலக்கோட்டில், போராட்டத்தை தடுக்க முயன்ற போலீஸ்காரர் கையை கடித்த த.வெ.க., தொண்டர் உட்பட ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகே, நவ., 22ல் புதிதாக மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. இதை கண்டித்தும், அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட த.வெ.க.,வினர், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மனமகிழ் மன்றத்தை முற்றுகையிடவும் முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாலக்கோடு போலீசார், அவர்களை தடுத்து, 16 பெண்கள் உட்பட 103 பேரை கைது செய்தனர். மு ற்றுகையின் போது, த.வெ.க., தொண்டரான மகேந்திரமங்கலம் அடுத்த வீரசானுாரைச் சேர்ந்த ஜெமினி, 23, பாலக் கோடு போலீஸ் தலைமை காவலர் அருணின் கையை கடித்தார். இதை தொடர்ந்து, த.வெ.க., தொண்டர்களான ஜெமினி, ஜெயபிரகாஷ், 25, கணேசன், 42, கிருஷ்ணன், 45, வினோத்குமார், 35 என, ஐந்து பேரை நேற்று பாலக்கோடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி