சுடுகாடு கேட்டு போராட முயற்சி
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், வெங்கடசுமுத்திரம் ஊராட்சி, கோழி மேக்கனுாரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த, 168 குடும்பத்தினர் கடந்த, 2 ஆண்டுக்கு மேலாக வசிக்கின்றனர். நேற்று இங்குள்ள செந்தில் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சுடுகாடு வசதி-யின்றி, அவரை அடக்கம் செய்ய முடியாமல் திணறிய குடியிருப்-புவாசி சங்க நிர்வாகிகள் தென்னரசு, ராஜாமணி, தொல்காப்பியன் உள்ளிட்டோர் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளியிடம் சுடு-காடு வசதி கேட்டு முறையிட்டனர். அவரின் பதிலால் திருப்திய-டையாமல், சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால், சட-லத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.அவர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி ஆர்.ஐ., கார்த்திக், வெங்கட சமுத்திரம் வி.ஏ.ஓ., சுரேஷ் ஆகியோர், முறைப்படி மனு கொடுத்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தற்போது மட்டும் பாப்பிரெட்டிப்பட்டி சுடுகாட்டில் அடக்கம் செய்ய கூறியதையடுத்து, இறந்த செந்திலின் உடலை, பாப்பி-ரெட்டிப்பட்டி சுடுகாட்டில் மக்கள் அடக்கம் செய்தனர்.