உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்தில் டிரைவர்கள் இருவர் மரணம்

விபத்தில் டிரைவர்கள் இருவர் மரணம்

மத்துார்:தர்மபுரியிலிருந்து, வேலுார் நோக்கி அரசு பஸ் நேற்று சென்றது. மாலை, 4:00 மணிக்கு, மத்துார் தனியார் பள்ளி அருகே, தர்மபுரி - திருப்பத்துார் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே 'எம்-சாண்ட்' ஏற்றி வந்த லாரி மீது மோதியது.அப்போது பஸ் முன்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூக்குரலிட்டனர்.அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த லாரி டிரைவர் மத்துார் அடுத்த சிவம்பட்டியை சேர்ந்த குமார், 32, சம்பவ இடத்திலேயே பலியானார்.அரசு பஸ் டிரைவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்த பரமசிவம், 56, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மேலும், தர்மபுரி, திருப்பத்துார், மத்துார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை