மேலும் செய்திகள்
28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
26-Mar-2025
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அங்கு வந்த பென்னாகரம் அடுத்த, வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த மாதப்பன், 70, அவர் மனைவி மங்கம்மாள், 56, ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்தனர்.அதில் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டி வசித்த இடத்தின் அருகே, வேறு ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவருக்காக வருவாய்த்துறையினர் எங்களது நிலம் நீர்நிலை கால்வாயில் உள்ளதாக கூறி, வீட்டை அகற்ற உத்தரவிட்டனர். இது குறித்து, முறையாக அளவீடு செய்யாமல், எங்களை அங்கிருந்து அகற்றும் நோக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினர். கலெக்டரிடம் மனு அளிக்க அவர்களை, போலீசார் அழைத்து சென்றனர்.அதேபோல், சாமாண்டஹள்ளியை சேர்ந்த சிவக்குமார், 46, அவரின் மனைவி சென்னம்மாள், 38, ஆகியோர், தங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை உறவினர்கள் ஆக்கிரமித்து தடுப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை மீட்டு, விசாரணைக்கு, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர்.
26-Mar-2025